ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முத்தமிழ்க் காவலர் பேரவைத் தலைவர் ந.தமிழ்மறவன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கான படிவங்கள் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் உள்ளன. பெங்களூரு தமிழ்ச் சங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அனைவரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, ஈழத் தமிழர்களின் துயர்துடைக்கும் பணியில் ஒன்றுபடுவோம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்ச் சங்கத்தை 080-25510062 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரவிக்கப்பட்டுள்ளது.

No comments
Post a Comment