இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குமார் சங்கக்காரா விடைபெறவிருக்கிறார்.
சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணப் போட்டிகளோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற முடிவு செய்திருந்தார்.
ஆனால் அணித்தலைவர் மேத்யூஸ் மற்றும் சில கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, தான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகும் சங்கக்காராவை சிறந்த முறையில் வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான முழுத் தொடரில் அவரை விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறது.
No comments
Post a Comment