Latest News

June 26, 2015

புலிகளின் எச்சசொச்சங்களை நாம் ஆதரிப்பதில்லை: இரா.சம்பந்தன் பகிரங்க அறிவிப்பு
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. இப்படி வெளிப்படையாக உள்ளதை பேசியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரிஸ் விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

சம்பந்தன் உரையாற்றியபோது- ‘இன்றைய குழப்பகரமாக நிலைக்கு ராஜபக்சதான் பொறுப்பு கூற வேண்டும். ஐ.நா செயலாளர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமைதான் குழப்பங்களிற்கு காரணம். இதற்கான சகல பொறுப்பையும் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான பீரிஸ் ஏற்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. யுத்தம் முடிந்த பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வழங்கிய தீர்ப்பு என்ன? பிரிக்கப்படாத இலங்கைக்குள் எமக்கான தீர்வைத்தாருங்கள் என்றுதானே கேட்டார்கள்.

நாம் உங்களுடன் 18 தடவைகள் பேசினோம். ஆனால் கண்ட பலன்தான் என்ன? அனைத்துமே வீண். நீங்கள் ஒரு பொறுப்பான அரசாக நடந்தீர்களா? எமது கழத்தை அறுக்கத்தானே முயன்றீர்கள்.

சர்வதேசம் முதலில் உங்களிடம் உள்நாட்டு விசாரணையைத்தானே கோரியது. பின்னர்தானே சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சரான நீங்கள் கடைசிவரிசையில் உட்கார்ந்திருக்க, பெருந்தோட்ட அமைச்சர் முன்வரிசையில் உட்கார்ந்திருந்து பதிலளித்ததை பார்த்து வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன்.

எமது மக்களை மீள்குடியேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் உங்களிற்கு விருப்பமில்லை.கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நீங்கள் இன்று இனவாதத்திற்கு குடைபிடிக்கிறீர்கள். நீலன் திருச்செல்வத்தின் முன்மொழிவுகளை போல பீரிசின் முன்மொழிவுகளும் இருக்குமென பார்த்தோம். என்ன செய்தீர்கள்? எதையாவது சர்வதேசத்திற்கு செய்து காட்டினீர்களா?

புலம்பெயர்ந்த சகலரும் பொறுப்பற்றவர்கள் என நினைக்க வேண்டாம். அவர்களில் சகலதுறைகளிலும் விற்பன்னர்கள் உள்ளனர். இலங்கையை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்ல விரும்புபவர்களும் உள்ளனர். உங்களை ஆட்சிபீடமேற்றியவர்கள் புலிகள். இன்று நீங்கள் அவர்களை விமர்சிப்பது வேடிக்கை’ என்றார்.


« PREV
NEXT »

No comments