உலகில் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரப்படுத்துமாறு ஐக்கிய நாட்டை கோரும் கையெழுத்து போராட்ட அலை ஓயாமல் அடித்து கொண்டிக்கிறது. இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்கி தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள்.
தமிழினப்படுகொலை விவகாரத்தில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் கையெழுத்து போராட்டத்தில் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் ஶ்ரீலங்கா அரசை குற்றவாளி கூண்டில் ஏற்றி தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டும் என்ற குறிக்கோளுடன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்கள். அதேசமயம் புலம்பெயர் தேசங்களில் கையெழுத்து வேட்டையில் இளைய சமுதாயங்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்து போராட்டத்தில் இணைந்து பங்களிப்பை செய்து வருகிறார்கள். குறிப்பாக பிரித்தானியா வாழ் இளம் தமிழ் சமுதாயங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்..
நீங்கள் உங்கள் பங்களிப்பை செய்வதற்கு www.tgte-icc.org என்ற இணையத்துக்கு செல்லவும்.
ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசை நாங்கள் உலக அரங்கில் தண்டிப்பதுடன் எமது விடுதலையை வீச்சாக்குவதுடன் சுகந்திர தமிழீழ அரசை நிறுவுவதே தமிழர்களுக்கான தீர்வாகும் என்பது இன்றைய இளைய தமிழ் சமுதாயத்தின் ஏகோபித்த முடிவாகும் என்பதை அவர்கள் உலகுக்கு பறைசாற்றுகின்றார்கள்.
காணொளி விளக்கம் www.tgte-icc.org

No comments
Post a Comment