Latest News

June 30, 2015

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய நேவி சம்பத்துக்கு பிணை - மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை:-
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படை உத்தியோகத்தர் திலங்க சம்பத் முனசிங்க எனப்படும் நேவி சம்பத்திற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவின் பிரத்தியே செயலாளராக நேவி சம்பத் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் லலித் ஜயசூரியவி, நேவி சம்பத்தை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.


25000 ரூபா ரொக்கப் பிணை, தலா ஐந்து லட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.


இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் சில கடற்படை உத்தியோகத்தர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி கொழும்பு அல்விட்டிகல வீதியில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.


இதேவேளை, இந்த கொலைச் சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மெத்தனக் போக்வே வழக்குத் தொடரவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாத நிலைமைக்கான காரணம் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments