Latest News

June 14, 2015

பணத்தில் ரஜினிக்கு அடுத்து விஜய்;புகழில் விஜய்க்கு அடுத்து ரஜினி.. இருவருக்கும் மேலே 'தல'
by Unknown - 0


போர்ப்ஸ் பத்திரிக்கை இன்று காலையில் பணம்,புகழ்,செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் சல்மான் கான் உள்ளார். 

வருடத்திற்கு 244 கோடிக்கும் அதிகமான வருமானம் பெற்று அதிகம் சம்பாதிப்பவராக மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகுந்த புகழ் வாய்ந்தவராகவும் முதலிடத்தில் உள்ளார் சல்மான் கான்.

நடிகர் ஷாரூக்கான் 202 கோடியுடன் பணத்தில் இரண்டாம் இடத்திலும் புகழில் 7 ம் இடத்திலும் இருக்கிறார். விளையாட்டு வீரரான டோணிக்கு பணத்தில் 5 ம் இடமும், புகழில் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. டோணியையும் மிஞ்சி புகழில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் விராத் கோஹ்லி. பண விஷயத்தில் அவருக்கு 12 ம் இடம் கிடைத்து இருக்கிறது.

நடிகைகளில் தீபிகா புகழில் 5 ம் இடத்திலும் பணத்தில் 9 வது இடத்திலும் இருக்கிறார். 

தமிழ் நடிகர்களில் இந்தப் பட்டியலில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித். ரஜினிக்கு பண விஷயத்தில் 21 வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடமும் கிடைத்துள்ளது. விஜய்க்கு பண விஷயத்தில் 23 வது இடமும் புகழ் விஷயத்தில் 80 வது இடமும் கிடைத்துள்ளது. ரஜினி மற்றும் விஜயை பண விஷயத்தில் முந்திய அஜித் பணத்தில் பெற்ற இடம் 19 புகழில் பெற்ற இடம் 98. 

ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷும் இடம்பெற்று இருக்கிறார்.
« PREV
NEXT »

No comments