தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான அமெரிக்காவின் அறிக்கை கவனிக்க்பபட வேண்டியது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட வேண்டுமெனவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பதிலாக அரசாங்கம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் அதன் பின்னரே இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment