Latest News

June 23, 2015

உருத்திரபுரத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
by Unknown - 0

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தில் காணாமல் போன மூன்று வயது சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீராடுவதற்காக நேற்று முன்தினம் தனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் சென்ற சந்தர்பத்திலேயே சிறுமி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எள்ளுக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றுக்கு அருகில் சிறுமியை விட்டுவிட்டு குறித்த நபர் குளிக்க சென்றதாகவும் அதன் பின்னர் குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரன் உள்ளிட்ட ஐந்துபேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்டபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments