இலங்கை அரசாங்கம் யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகமொன்று இலங்கை இவ்வாறு யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஜே.எப். – 17 தண்டனர் என்ற ரக தாக்குதல் விமானத்தை இலங்கை கொள்வனவு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானை மையமாகக்கொண்ட வான்ட் சீனா டைம்ஸ் என்ற இணையத் தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டளவில் இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் இணைய தளமொன்றும் செய்தி வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும் இவ்வாறு தாக்குதல் விமானங்கள் எதனையும் கொள்வனவு செய்யும் உத்தேசம் கிடையாது என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
No comments
Post a Comment