புத்தளம் நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டட தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.
இன்று (14) காலை 6 மணியளவில் கட்டட தொகுதியில் தீ பரவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புத்தளம் நகர சபையில் தீ அணைப்பு பிரிவுக்கான வாகணம் காணப்படுகின்ற போதிலும் அந்த தீயணைப்பு வாகனம் செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கல்லடி தம்பப்பண்ணி கடற்படையினரின் தீயணைப்பு வாகனம் மற்றும் பலாவி விமான படையினரின் தீயணைப்பு வாகனமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புத்தளம் பிராந்தியத்திற்கான இராணுவ முகாம் உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
05 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை கட்டுபாபட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும் தீயால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவி இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments
Post a Comment