அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தீய செயல்களிற்கு பங்களிப்பு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தியத்தலாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில எதிர்கட்சி உறுப்பினர்கள் அரச அமைச்சர்களாகி உள்ளனர் . பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளனர், அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தீய நடவடிக்கைகளிற்கு துணை போகின்றனர். ஆனால் அவர்களினால் மக்களை நீண்ட காலம் ஏமாற்றமுடியாது, மக்கள் இரு தடவை ஏமாற மாட்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் அடுத்த சில நாட்களில் முடிவிற்கு வரலாம்.
2009 ம் ஆண்டு நாங்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்தபோதிலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் தீவிரமாக செயற்படுவதாக அமெரிக்க அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.நாங்கள் முன்னர் இதனை தெரிவித்தபோது எங்களை இனவாதிகள் என்றார்கள் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment