Latest News

June 16, 2015

யேமன் அல்கயீதா தலைவர் கொல்லப்பட்டார்!
by Unknown - 0

யேமனில் இருக்கும் அல்கயீதா கிளை தமது தலைவர் கடந்தவார அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறது.

ஆளில்லா விமானத்தாக்குதலில் நாசர் அல் உஹாய்ஷியும் மேலும் இருவரும் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளது.

ஒருகாலத்தில் அல்கயீதாவின் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அவர் மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

இவரது அமைப்பு அரேபிய தீபகர்ப்பத்தின் அல்கயீதா (Al Qaeda in the Arabian Peninsula or AQAP) என்று அழைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான பல தாக்குதல்களுக்கு இந்த அமைப்பே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஜனவரி மாதம் பாரிஸில் நடந்த சார்ளி ஹெப்தோ மீதான தாக்குதல்களுக்கும் இவரது அமைப்பே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டுவந்தது.

சமீப மாதங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் அரேபிய தீபகர்ப்ப அல்கயீதா அமைப்பின் மூத்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் இறந்திருக்கிறார்கள். இதனால் அந்த குழுவுக்குள் எதிர்தரப்பு ஊடுறுவியிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

« PREV
NEXT »

No comments