சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், நாளை மதியம் 2 மணியளவில் தண்டையார் பேட்டை தேர்தல் அலுவலகத்தில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. முன்னதாக மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியின் (மாநகராட்சி மண்டல அதிகாரி) அலுவலகத்தில் தான் எல்லோரும் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதையடுத்து, தண்டையார் பேட்டையில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வது உறுதியாகியுள்ளது.
No comments
Post a Comment