Latest News

June 04, 2015

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்துள்ள விவகாரம் - அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்
by Unknown - 0

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்துள்ள விவகாரம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மின்சார வேலைத்திட்டம் காரணமாக குடிநீர், சூழல் மாசு ஏற்பட்டதாக தெரிவித்து சுற்றுச்சூழல் பராமரிப்பு மத்திய நிலையத்தின் தலைவர் ரவீந்திர காரியவசம் இவ்ழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, மின்சார சபை, வட மாகாண முதலமைச்சர், வலிகாமம் பிரதேச சபை தலைவர், நொதேர்ண் மின்சார நிறுவகம் ஆகியோரது பெயர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதிவாதிகள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
« PREV
NEXT »

No comments