எதிர்கால சந்ததிகளான இளைஞர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறும் அறிவுரை, தன்னைப் போல எவரும் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் என்பதுதான்.
இது குறித்து இளைஞர்களுக்கு தனது Blogger இல் அவர் கூறியிருப்பதாவது, வெற்றியை அடைய மிக எளிதான வழி பட்டப்படிப்புதான். எனவே, மாணவர்கள் பட்டப்படிப்பை முடியுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீர்கள், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் கிடைக்கும். பட்டம் பெறாதவர்களோடு ஒப்பிடும் போது, பட்டம் பெற்றவர்கள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ முடியும். பட்டம் பெற்ற இளைஞர்களால்தான் அமெரிக்காவின் பொருளதாரமும் உயரும் என்று கூறியுள்ளார்.
No comments
Post a Comment