Latest News

June 27, 2015

மாணவர்களை கபேக்குள் தனியாக அனுமதிக்கக் கூடாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்து
by Unknown - 0

ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் வரும்போது மடடுமே மாணவ மாணவிகளை சபேக்குள் அனுமதிக்க வேண்டும்.  தனியாக மாணவ மாணவிகள் வரும் போது அனுமதிக்கக் கூடாது என யாழ்.மேல் பதி மா.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிதவதற்கு கபேக்கள் அல்லது இணையதள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும்; எனவே சைபர் குற்றம் சம்பந்தமான சட்டங்களை இறுக்கமாக கடைப்பிடித்து அமுல்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேல் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற பிணை மனு வழக்கொன்றில் இடம் பெற்ற விசாரணையின் போதே அவர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

18வயதுக்கு குறைந்த சிறுவர்கள்,மாணவ மாணவிகளை தனியாக சைபர் கபேக்கு அனுமதிக்கக்கூடாது.

பெற்றோர்களுடன் சிறுவர்கள் வரும்போது மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.மாணவ மாணவிகளை சைபர் கபேக்குள் தனியாக அனுமதிக்கக்கூடாது.

பொலிஸ் புலனாய்வு மூலம் கபேக்கள் கண்காணிக்கப்பட்டு சைபர் குற்றங்கள் புரிகின்றார்களா என்பதை அவதானித்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 கபேக்களில் அறிவியல் புரட்சி தகவல்களை தர இறக்கம் செய்வதை விட யாழ்ப்பாணத்தில் பாலியல் ரீதியான இணையத்தள தர இறக்கங்கள் அதிகமாக இடம் பெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கபே பொதுமக்கள் மத்தியில் பொதுமக்கள் பாவனைக்காக நடத்தப்படுகின்ற போது சட்ட ஒழுங்குக்கு உட்பட்டு நடக்காத நபர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

நீதிமன்ற கட்டளை பெற்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஊடாக குறிக்கப்பட்ட  கபே சைபர் குற்றங்களைப் புரிகின்றனவா என்பதைக் கண்காணித்து அவர்கள் உள் நுழைகின்ற இணையத் தளங்களை அவதானித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்,டுவிட்டர் போன்ற வலைத்தளங்கள் நன்நோக்கத்திற்காக, தொடர்பாடல்களுக்காக உருவாக்கப்பட்டவை. இந்த அறிவியல் புரட்சியை நாசப்படுத்தி சிலர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சமூக விரோதக்குற்றங்கள்,கலாசார சீரழிவுகளை புரிகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்துவதற்கு சைபர் குற்றங்கள் சட்டத்தை யாழ்ப்பாணத்தில் அமுலுக்கு கொண்டு வரவேண்டும்.

எந்தத் தொலைபேசியில் இருந்து இயங்குகின்றது, எந்த கைத்தொலைபேசியிலிருந்து இயங்குகின்றது,எந்த தொலைத் தொடர்பு கோபுரப் பகுதியிலிருந்து இயங்குகின்றது என்பவற்றை தொழில்நுட்பம் மூலம் மிக இலகுவில் கண்டுபிடிக் கக்கூடிய இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை பாவித்து நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்,சமூக சீரழிவை ஏற்படுத்தும் இணையத்தளங்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் அவற்றுக்குத் துணை போகின்ற சைபர் கபேக்கள் சட்டரீதியாக இயங்குகின்றனவா? சட்டரீதியான பதிவுகளுடன் இயங்குகின்றனவா? சைபர் குற்றங்கள் புரிகின்றனவா? என்பவற்றை பொலிஸ் புலனாய்வின்மூலம் கண்காணித்து குற்றம் புரியும் சைபர் கபேக்களை நீதிமன்ற உத்தரவில் இழுத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அறிவியல் புரட்சியின் மூலம் அறிவை வளர்ப்பதற்கு நீதிமன்றம் தடையாக இருக்காது. மாறாக அறிவியல் புரட்சி என்ற போர்வையில் சமூக,கலாசார சீரழிவை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சைபர் கபேக்கள் சட்டக்கண்காணிப்புக்குள் பொலிஸ் புலனாய்வுக்குள் உடனடியாக கொண்டுவரப்பட்டு சைபர் குற்றங்கள்  சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படு கின்றார்கள்.       
« PREV
NEXT »

No comments