Latest News

June 03, 2015

மாகி நூடில்ஸுக்கு தடை!
by Unknown - 0

இந்தியத் தலைநகர் டில்லியில் முன்னணி நூடில்ஸ் ஒன்றின் விற்பனைக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

அந்த நூடில்ஸில் ஈயத்தின் அளவு மிக அதிக அளவில் உள்ளது ஆய்வுகளில் தெரிய வந்ததாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே இந்தியாவில் தயாரிக்கும் பிரபலமான மாகி நூடில்ஸில் ஈயம் பாதுகாப்பான அளவுகளுக்கு மேல் உள்ளன என்றும் உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல மாநிலங்கள் ஏற்கனவே மாகி நூடில்ஸின் விற்பனைக்கு தடை விதித்துள்ள நிலையில், இப்போது டில்லியிலும் தடை வந்துள்ளது.

ஆனால் அந்த நிறுவனமோ தமது பொருட்கள் பாதுகாப்பானவை என்று தொடர்ந்து கூறி வருகின்றன.

தமிழகத்திலும் தடை

கேரள அரசைத் தொடர்ந்து மேகி நூடுல்சுக்கு தடைவிதிக்க பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து வருகின்றன. தமிழக அரசு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

உலகம் முழுவதும் 5.2 பில்லியன் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. மேகி நூடுல்ஸ்சில் ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள தகவலையடுத்து அதனை பயன்படுத்துவது குறித்து தமிழகத்திலும் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் மேகி நூடுல்ஸ் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே மேகி நூடுல்ஸ் தரம் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சோதனை முடிவு இந்த வார இறுதியில் வெளியாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன. மேகி நூடுல்சுக்கு தடைவிதிப்பது குறித்து ஆராய்வதற்காக மேற்கு வங்க அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

« PREV
NEXT »

No comments