ஃபிஃபாவுடன் தொடர்புடைய ஆறு பேரை சர்வதேச் அளவில் தேடப்படும் நபர்களாகக் கூறி சர்வதேச காவல்துறை அமைப்பான இண்டர்போல் அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது.
அவர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் நான்கு பெருநிறுவன அதிகாரிகள் மற்றும் ஃபிஃபாவின் இரண்டு முன்னாள் அதிகாரிகளும் உள்ளனர்.
தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஃபிஃபா அதிகாரிகளில் முன்னாள் துணைத் தலைவர் ஜாக் வார்னரும் ஒருவர்.
இந்த ஆறு பேரும் மீது அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள், ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இண்டர்போல் மூலம் விடுக்கப்பட்டுள்ள 'சிவப்பு அறிக்கையானது' பெயரிடப்பட்டுள்ளோரை கைது செய்து நாடு கடத்த கோருகிறது.
எனினும் அதில் பெயரிடப்பட்டுள்ள யாரையும் தடுத்து வைக்கும்படி எந்த நாட்டையும் இண்டர்போல் நிர்பந்திக்க முடியாது.
No comments
Post a Comment