Latest News

June 05, 2015

ஜீன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்
by admin - 0

ஜீன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி வழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஜக்கிய நாடு அமைப்பு 1972ம்ஆண்டில் ஜீன்5ம்தேதி ஓன்று கூடி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அன்றில் இருந்து இத்தினம் கொண்டாடி வருகின்றனர் காடுகள் இயற்கைகளில் உங்கள் பணிகள் என்ற நோக்கத்தோடு கடைபிடிக்கப்படுகிறது
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இத்தினம் பயன்படுகிறது ஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம்
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
தாவரங்கள் விலங்கினங்கள் உயிர்பண்மயம் நீர் காற்று ஆகியவை மனிதன் உயிர்வாழ துணைநிற்கும் அங்கங்களாகும் இயற்கை வளங்கள் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்தல் இயலாது என்பது மறக்கமுடியாத உண்மை இயற்கை வளங்கள் காடுகளில் பொதிந்து கிடக்கிறது பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு புகலிடம் காடுகள் தாம் என்பதை நாம் அறிவோம் அதனால் பாரதியார் காடுகள் செய்வோம் என்று பாடினார்

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது உலகளவில் 160கோடிக்கும் மேற்பட்டடோர் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு காடுகளை சார்தே வாழ்கின்றனர் மேலும் காடுகள் 30கோடி பேருக்கு வீடாக பயன்படுகிறது 2005ம் ஆண்டு கணக்கின்படி 189லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய்க்கு காடுகள் மூலம் வியாபாரம் நடந்துள்ளது பூமியின் நுரையிரல்போல் காடுகள் திகழ்கின்றன ஆண்டுதோறும் 1கோடியே 30லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன தண்ணீர் மழைப்பொழிவு மண்வளம் மனிதர்களைப் போலவே உயிரினங்களின் வாழ்க்கைக்கு காடுகள் பயனுள்ளதாக உள்ளன
பிளாஸ்டிக் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினாலும் இன்னும் அதிகமான இடங்களில் அதன்பயன்பாடு உள்ளதை கண்கூடாக பாரக்க முடிகிறது தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதனை மேம்படுத்தவும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவும் 1996ஆம் ஆண்டு தமிழக அரசால் சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்;டது சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற மாணவர்ச்சமுதாயமே உகந்தவர்கள் எனக்கண்டறியப்பட்டது
இதனைத்தொடர்ந்து 1998ம் ஆண்டில் இந்தியாவிலே முதன்முதலாக நம்மாநிலத்தில் உள்ள 3மாவட்டங்களில் 170பள்ளிகள் மற்றும் 10கல்லூரிகளில் தான் சூழல் மன்றங்கள் தொடங்கப்பட்டது அதன்பின்னர் மாவட்டம்தோறும் 40பள்ளிகள் வீதம் விரிவுப்படுத்தப்பட்டது தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மன்றங்கள் இருக்கிறது

இந்தியா இன்னும் வளரும் நாடாகவே உள்ளது மற்ற நாடுகளைப்போலவே இந்தியாவும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது போதிய குடிநீர் வசதியின்மை துப்பரவு வசதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் வறுமைதான் மிகவும் கவலையளிக்கும் அம்சமாக உள்ளது இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இயற்கை வளங்கள் குறைந்து வருகிறது
அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இயற்கைச்சூழலை கெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன இதனால் காற்று நீர் அணு உள்ளிட்டவை மாசுபடுகின்றன உலகின் வெப்பநிலை உயர்ந்து மழை குறைகிறது அண்டார்டிகா இமயமலை பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது கடந்த 10ஆண்டுகளில் கடல்மட்டம் 10முதல் 25செ மீ வரை அதிகரித்துள்ளன
பசுமை இல்லா வாயு அதிகரிப்பு வெப்பயமமாதல் கடல் மட்டம் உயர்வு ஆகியவை சங்கிலித்தொடர்பு போல் ஏற்படுகின்றன வளரும் தீவு நாடுகள் அப்பாவி நாடுகளாக உள்ளன ஆனால் அந்த நாடுகள்தான் இந்த பருவ நிலை மாறுதலால் அதிகப்பாதிப்பை அடைகின்றன உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்ற அளவில் இந்தத்தீவு நாடுகளின் பங்கு ஓரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன ஆனால் அவை எதிர்கொள்ள இருக்கும் விளைவுகளோ பல மடங்கு அதிகம் என்ற சொல்லலாம்
பருவநிலை மாறுதலைக்கட்டுப்படுத்துவதும் உலக வெப்பமாதலைத்தடுப்பதும் அரசின் வேலை மட்டுமல்;ல இதில் ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பும் கடமையும் பிணைந்து இருக்கின்றது கடந்த 10ஆண்டுகளாக பூமியின் வெப்பம் அதிகரிக்கக்காரணம் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகரித்தே ஆகும் நாம் எரிபொருள்களின் பயன்பாட்டைக்குறைத்தால் உலக வெப்பமயமாதல் என்ற பேராபத்தை குறைக்கலாம்
இந்தியா வலிமையான சிறப்பாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுள்ளது 1976ம் ஆண்டில் 42வது அரசியல் சட்ட திருத்தத்தின் படி இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 48(ய) மற்றும் 51 ய(ப)பிரிவுகளின் படி சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும் இந்திய சுற்றுச்சூழல் சட்டம் ஓரே நேரத்தில் உருவாக்கப்பட்டது இல்லை மாறாக படிப்படியாக பல்வேறு சம்பவங்களால் ஏற்பட்ட விளைவுகளை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்

இந்திய சுற்றுச்சூழல் சட்டம் உருவாக்கப்பட்டதன் பிண்ணனியில் 3முக்கிய சம்பவங்கள் உள்ளன 1972ம்ஆண்டில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் மாநாடுதான் பல்வேறு சட்டங்கள் இயக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது தண்ணீர் சட்டம் காற்றுச்சட்டம் வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய அரசியல் சட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டது இதற்கு காரணமாகும்

1984ஆம் ஆண்டில் போபாலில் விஷவாயுக்கசிவு ஏற்பட்டபோதுதான் இந்திய சட்ட அமைப்பில் உள்ள குறைபாடுகள் தெரிந்தது இதன்பிறகு இதற்காக நிறைய சட்டங்கள் உருவாக்கப்பட்டது மனித சமுதாயத்தின் தொடர் வளர்ச்சியை பேணும் வகையில் புவியின் வளப்பம் என்ற சொற்தொடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது 1980ஆம் ஆண்டில் இந்த வார்த்தை முக்கியத்துவம் பெறத்தொடங்கியது எதிர்கால சந்ததியினர் வளமான வாழ்விற்கு பாதகம் ஏற்படாமல் இப்போதைய தலைமுறையினரின் வளர்ச்சத்தேவையை நிறைவு செய்வதே தொடர் வளர்ச்சியாகும் என்று ஜக்கிய நாடு ஆணையம் 1987ம் ஆண்டு மாரச் மாதம் 20ம்தேதி வரையறை செய்தது

இதைத்தொடர்ந்து 2005ம் ஆண்டு நடைபெற்ற உயர்நிலை மாநாடு சுற்றுச்சூழல் பராமரிப்பு சமுதாய சமத்துவம் பொருளாதார எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சமுதாய மேம்பாட்டிற்கு அவசியம் என்பதை வலியுறுத்தியது தொடர் வளர்ச்சிக்கான மூன்று வலுவான தூண்கள் இவை என்று இம்மாநாடு வர்ணித்தது
மக்கள்தொகையில் 2வது இடத்திலும் பரப்பளவில் 7வது இடத்திலும் நம்நாடு உள்ளது மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியா சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும் பிரச்சினையாக விளங்குகிறது இதை எதிர்கொள்ள இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆனால் மக்களாகிய நாம் அதற்கான நடவடிக்கை எடுக்க தவறுகிறோம் இன்று முதல் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒவ்வொருவரும் தனக்குள் சபதம் ஏற்றுக்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது அதிகளவில் மரக்கன்று நடுதல் மறுசுழற்சி முறையை கையாளுதல் போன்வற்றை பின்பற்றி நடக்கனும்

- பொ. ஜெயச்சந்திரன் திருவரங்குளம்


அலைபேசி: +919751239014
« PREV
NEXT »

No comments