Latest News

June 06, 2015

200 காவல்துறை அதிரடியாக புகுந்து தலைவர் சிலையை அகற்றியது
by admin - 0

தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்கு பொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தமிழீழ ராணுவத்தின் தலைவர்,எம் தேசியத்
 தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிலைவைத்து வழிபட்டு வந்தனர்.நேற்று இரவோடு இரவாக,சுமார் 200 தமிழக காவலர்கள் ஊருக்குள் புகுந்து,மின்சாரத்தை துண்டித்து,தலைவரின் சிலையை உடைத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள்.

ஊர்மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் கண்ட கண்ட வந்தேறிகளுக்கு சிலை வைத்து கொண்டாடும் இந்த அரசு,அதன் ஏவல்துறையை விட்டு தலைவர் சிலையை அகற்றியது ,தமிழ்மக்களின் உணர்வை மதிக்காத இந்த செயலை நாம் தமிழர் குவைத் மண்டலம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.எந்த காவல்துறை எம் தலைவரின் சிலையை உடைத்ததோ அதே காவல்துறை தலைவரின் படத்திற்கும் சிலைக்கும் காவல் காக்க வைப்போம் கூடிய விரைவில்... 

நாம் தமிழர் கட்சி
குவைத் மண்டலம்.
« PREV
NEXT »

No comments