Latest News

June 03, 2015

நியூசிலாந்து வெற்றி!
by Unknown - 0

நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 199 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து அணிக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தமது முதல் இனிங்சிற்காக 350 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில் தமது முதலாவது இனிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியும் 350 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தமது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 454 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது இனிங்சை இடைநிறுத்தியது.

455 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய இறுதி நாளில் 255 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றிருந்த நிலையில் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.

« PREV
NEXT »

No comments