சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்த குழுவில் ஆண்டுதோறும் 12 பேர் இடம் பெற்றிருப்பார்கள். மிகவும் கவுரவமிக்க இந்த பட்டியலில் இடம் பெறுபவர்களுக்கு தான் உலகக்கிண்ணம் போன்ற பெரிய போட்டிகளுக்கு நடுவராக பணியாற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள 2015-2016ம் ஆண்டு எலைட் பேனல் நடுவர் குழுவில் இந்தியாவின் சுந்தரம் ரவி இடம் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 வயதான சுந்தரம் ரவி இதுவரை 6 டெஸ்ட், 24 ஒருநாள் போட்டி மற்றும் 12 டி20 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.
கடைசியாக எஸ்.வெங்கட்ராகவன் இந்த குழுவில் அங்கம் வகித்திருந்தார்.
நடுவர் குழு:-
1) அலீம் தர் (பாகிஸ்தான்)
2) தர்மசேனா (இலங்கை)
3) மரைஸ் எராஸ்மஸ் (தென்ஆப்பிரிக்கா)
4) கிறிஸ் காப்பனி (நியூசிலாந்து)
5) இயான் கவுல்டு (இங்கிலாந்து)
6) ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து)
7) ரிச்சர்ட் கெட்டில் போரப் (இங்கிலாந்து)
8) நைஜல் லாங் (இங்கிலாந்து)
9) சுந்தரம் ரவி (இந்தியா)
10) பால் ரீபெல் (அவுஸ்திரேலியா)
11) ராட் டக்கர் (அவுஸ்திரேலியா)
12) புருஸ் ஆக்சன்போர்டு (அவுஸ்திரேலியா)
No comments
Post a Comment