Latest News

June 09, 2015

மர்ம சாவுகள் -இன்றும் ஒருவரின் சடலம் மீட்பு
by admin - 0

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மராட்சியில் சாவகச்சேரி மகளீர் கல்லூரிக்கு அருகில் இளம் ஆணின் சடலம் மீட்கப்பட்டது.

 

இன்று காலை 5.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இளம் குடும்பஷ்தரான தவக்குமார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இவர் வேலியோரமாக வீழ்ந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார்.

இவரது மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை. இவரின் முகத்தில் உரசல் காயங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மர்மமான முறையில் தமிழர் பிரதேசங்களில் கொலைகள் இடம்பெறுவது தற்போது அதிகரித்துள்ளது 
« PREV
NEXT »

No comments