வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வீதியில் உள்ள காட்டுப்பகுதியில் அனாதரவாக கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் 01.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் செங்கலடி எல்லை நகர் வீதியைச் சேர்ந்தவர் என்றும் 1974.10.17ம் திகதி பிறந்த கோணலிங்கம் வடிவேல் என்றும் அவரது அடையாள அட்டை மூலம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் உள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதுபோன்ற மரணங்கள் புதியதொரு இன அழிப்பின் வடிவமா?

No comments
Post a Comment