கலிஃபோர்னியாவின் மிருககாட்சி சாலையில் இருந்த 150 வயதைத் தாண்டிய ராட்சத கலபாகோ ஆமை கொல்லப்பட்டது. உடல் நலப் பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக இந்த ஆமை அவதிப்பட்டுவந்தது.
ஸ்பீட் என்ற பெயரைக் கொண்ட இந்த ஆமை, சில காலமாகவே வயிற்றுப் பிரச்சனையால் தவித்துவந்தது.
சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில் இருந்த இந்த ஆமைக்கு எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகள் இருந்துவந்தன.
1933ஆம் ஆண்டில் ஸ்பீட் கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஈக்குவெடாருக்கு அருகில் உள்ள வோல்கன் செர்ரோ அஸுல் என்ற தீவிலிருந்து இந்த ஆமை கொண்டுவரப்பட்டது.
தற்போது இந்த மிருகக்காட்சி சாலையில் 13 கலபாகோ ஆமைகள் இருக்கின்றன.
இந்த ஆமைகள், 90க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகளைப் பொரித்திருக்கின்றன. அவை பிற மிருகக்காட்சி சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் பல இந்த ஸ்பீட் ஆமைக்குப் பிறந்தவையாகும்.
No comments
Post a Comment