அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த தகவலை இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளார் ஜோன் கெரியின் ஊடாகவும் பரக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா விஜயம் செய்திருந்த போதும் பரக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
No comments
Post a Comment