முன்னாள் படைவீரர் ஒருவர் தனது வயிற்றில் துப்பாக்கி ரவை ஊடுருவியிருப்பதை 60 வருடங்களாக அறியாது வாழ்ந்த சம்பவம் சீனாவின் சிசுவான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
டஸொயு நகரைச் சேர்ந்த டுவான் ஸிகாய் (94 வயது) என்ற மேற்படி நபர், 1943 ஆம் ஆண்டு ஜப்பானிய போரின் போதும் 1950 களில் கொரியப் போரின் போதும் படைவீரராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட துப்பாக்கி ரவை 60 வருடங்களிலிருந்து 65 வருடங்களுக்கு முன் ஸிகாயின் வயிற்றில் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் துப்பாக்கி ரவை ஊடுருவியதால் எதுவித பாதிப்புமின்றி இயல்பு வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு இரு வருடங்களுக்கு முன்பிருந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அந்த வயிற்று வலியை அலட்சியம் செய்த அவர் பின்னர் வலி கடும் தீவிரமடைந்ததும் மருத்துவ உதவியை நாடினார்.
இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையின் போது அவரது வயிற்றில் துப்பாக்கி ரவையொன்று இருப்பதைக் கண்டறிந்து மருத்துவர்கள் திகைப்படைந்தனர்.
தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்த துப்பாக்கி ரவை அகற்றப்பட்டது.

No comments
Post a Comment