நாட்டில் உறுவாகியுள்ள அரசியல் நிலைமையினை பார்க்கும் பொழுது பத்து வருடங்களுக்கும் மேலாக சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை முடக்கி தான் நினைத்தபடி தனது கட்டுப்பாடில் வைத்திருந்த மஹிந்த ரஜபக்ஸ்ஸவை மீண்டும் பிரதமராக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டணி அமைப்பதற்கு தீர்மாணித்திருப்பது சம்பந்தமாக அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக வியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய மத்திய மாகாண சபை உறுபினர் அசாத் சாலியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசனும், நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்னவும் கூட்டாக இணைந்து தெரிவித்த கருத்தில் கூட்டணி அமைப்பதனை வன்மையாக கண்டிப்பதாகவும், எக்காரணத்தை கொண்டும் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், இதற்கு எதிராக பாதைகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்.
இங்கு மேலும் உரையாற்றிய அசாத் சாலிஹ் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரசிங்கவும் இந்த அரசாங்கத்தினை அமைத்த நாட்களிலிருந்து நாங்கள் கூறியதெல்லாம் கடந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடியவர்களையும், அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து நாட்டின் சட்டதிட்டங்களை நீதிக்கு புறம்பான முறையில் நடைமுறைப்படுத்திய அரசியல் வாதிகளை உடனடியாக சட்டத்துக்கு முன்னிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறேயாகும். அவ்வாறு வழங்கப்படிருக்குமாயின் இன்று கடந்த அரசாங்கத்தில் கொல்லை அடித்தவர்களெல்லாம் வெளியில் வந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராக கஸ்டங்களை கொடுத்திருக்கமாட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்தவர்களையும் நாட்டின் சொத்துக்களை கொல்லை அடித்தவர்களையும் நாங்கள் சட்டத்துக்கு முன்னிறுத்துகின்றோம் என்ற நாடகத்தினை நுன்னியமான முறையில் அரங்கேற்றி அவ்வாறனவர்களை கைது செய்து மீண்டும் இரண்டு நாட்களில் பினையில் வெளியே விடுக்கின்றார்கள். அதில் பலர் கடந்த அரசாங்கத்தில் எவ்வாறு சுதந்திரம்மாக தங்களது அரசியலை முனெடுத்தார்களோ அவ்வாறே இப்பொழுதும் அதனை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பலருக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ்ஸ நாட்டின் பிரதமராகும் என்னத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சுக்குள் பிளவினை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினை இரண்டாக பிரிக்கப்போவதாக ஜனாதிபதியையும் ஏனையோரையும் பயமுறுத்துக்கின்றார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மைத்திரிபாலவும், பிரதமர் ரணி விக்ரமசிங்கவுமே. அவர்கள் உரிய நேரத்தில் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிகைளை எடுத்திருப்பார்களேயானால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
எதுவாக இருந்தாலும் இந்த ஜனாதிபதியையும் பிரதமரையும் அதிகாரத்தில் உட்டாகார வைத்தவர்கள் இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களுமேயாகும். ஆகவே அவர்களுடைய உள்ளங்களை மதித்து நடப்பது இந்த அரசாங்கத்தினதும் ஜானாதிபதி பிரதமரினதும் கட்டாய கடமையாகும்.
அசாத் சாலியை தொடர்ந்து தனது கருத்தினை தெரிவித்த மனோ கனேசன்., இவ்விடத்தில் நாங்கள் ஒன்னு சேர்ந்துள்ளமைக்கான முக்கிய காரணம் மிகவிரையில் மைத்திபாலவும், மஹிந்தவும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வாகளா என்பதனை தெரிவிப்பதற்ககவே. அதனடிப்படையில் மைத்திரிபால ஜனாதியாக பதவியேற்றதும் உடனடியாக தன்னிடம் இருந்த பதவியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியினை தங்கத்தட்டில் வைத்து ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த கொடுத்த பொழுதே மிகவிரைவில் இவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏதாவது பிளவினை ஏற்படுத்தி மீண்டும் அரசியலுக்குள் அதிகார மிக்கவராக காலடி எடுத்து வைப்பதற்கும், மைத்திரிபாலவை அரசியலில் இருந்து ஓரம்கட்டுவதற்கு எடுக்கின்ற முடிவாகவே இருக்கப்போகின்றது என்பதனை நாங்கள் அறிந்திருந்தோம். அதுதான் இப்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த அரசாங்கமானது எவ்வாறு நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொடுங்கோள் ஆட்சியினை செத்து கொண்டிருந்ததோ அவ்வாறானதொரு ஆட்சியினை மீண்டும் இந்த நாட்டில் உறுவக்குவத்ற்காகவே சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்சனயாப்பா போன்றோர் முயற்சித்து வருக்கின்றனர். இவர்களுக்கும் மைத்திரிபாலவின் வெற்றிக்கும் சம்பந்தமே கிடையாது. வெற்றிக்கு வழிவகுந்தவர்களாக அசாத்சாலி, மனோகனேசன்,விக்ரமபாகு கருணாரத்ன, ராஜித சேனாரத்ன, சம்பிக்கரனவக்க, போன்றவர்களே இங்கிருக்கின்றனர். ஆனால் ஏதாவது அரசியல் மாற்றமோ, தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதானாலோ இப்பாடியாக ஜனாதிபதியின் வெற்றிக்கு தோல்கொடுத்தவர்களின் என்னங்களும் ஆலோசனைகளும் கவணத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஒரு வேலையில் மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ்ஸ வருவாரேயானல் அவர் முதலில் அரசியல் பழிவாங்கும் பட்டியலில் இருப்பவர் ஜனாதிபதி மைத்திபாலவேதான். அதற்குப்பிற்பாடுதான் எங்களைப் போன்றவர்கள் பழிவாங்கப்பட்டு உரிமைகள் இல்லாதொழிக்கப்படும். அந்தவகையில் தேர்தல் முறை மாற்றத்தினை மையப்படுத்தி இருபதாவது திருந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சிறுப்பான்மை சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளும் இல்லாதொழிக்கப்பட்டு பெரும்பான்மை கட்சிகளின் நிழலில் அரசியல் அனாதைகளாக வாழுக்கின்ற நிலைமைகு சிறுபான்மை சமூகம் தள்ளப்படும். ஆகாவே சிறுபான்மை கட்சிகளின் உதவிகளோடும் அதிகாரத்துக்கு வந்துள்ள மைத்திரிபாலவும் பிரதமர் ரணிலும் நடைமுறையில் உள்ள விகிதாரசார முறைமைக்கு முன்னுரிமை அளித்து சிறுபான்மை கட்சிகளின் அரசியல் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்தார். இவர்களுடைய கருத்துக்களுக்கு ஒப்பான கருத்துக்களையே நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்னவும் தெரிவித்தார்.



No comments
Post a Comment