இப்பேரணியில் விநாயகமூர்த்தி முரளிதரன், டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சீ.பி.ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி,
சாலித திஸாநாயக்க, மனுஷ நாணயக்கார, மஹித யாப்பா அபேவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகமகே, திஸ்ஸ கரலியத்த, உதித்த லொக்கு பண்டார, தேனுக விதானகமகே, சந்திரசிறி கஜதீர, சரண குணவர்த்தன, லக்ஷ்மன் வசந்த பேரேரா, டி.பி.ஏக்கநாயக்க,
இந்திக பண்டாரநாயக்க, மாலினி பொன்சேகா, ஜானக வத்குபுர, நிஷாந்த முத்துஹெட்டிகம, சந்திம வீரக்கொடி, சரத்குமார குணரத்ன, பிரியங்கர ஜயரத்ன, குமார வெல்கம உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு கருத்து வெளியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்,
இன்று மாபெரும் மக்கள் கூட்டத்தை பார்க்க வியப்பாக உள்ளது. நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம், அபிவிருத்தி என்பன மஹிந்த ராஜபக்ஷவினாலேயே ஏற்பட்டது.
எனவே எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைக்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி, சம்பந்தன் ஆகியோர் இன்று யாழ் போக முடியுமானால் இதனை வகுத்து கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷவே.
வடக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு கூடுதல் உதவி வழங்கியவர் அவரே.
எனவே நாம் அனைவரும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்போம் எனக் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment