Latest News

June 16, 2015

“அரும்புகளின்” 19வது இலவசக்கல்வியகம் கிளிநொச்சி மாவட்டம் நெத்தலியாறு கிராமத்தில்ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
by admin - 0

“அரும்புகளின்” 19வது இலவசக்கல்வியகம் கிளிநொச்சி மாவட்டம் நெத்தலியாறு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...........

உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் கல்வி நலத்திட்டப்பிரிவான “அரும்புகளின்” 19வது நிலையம் கிளிநொச்சி மாவட்டம் நெத்தலியாறு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2009 யுத்த அழிவுகளின் போது மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான  இக்கிராம மக்களின் வாழ்வாதாரம் வறுமைக்கோட்டின் கீழேயே உள்ளது. அதனால் மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அங்கு மாலை நேர வகுப்புக்களை நடத்துவதற்கு “அரும்புகள்” முன்வந்துள்ளது.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரம்ப நிகழ்வு நெத்தலியாறு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 05.06.2015 அன்றைய தினம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வினை சிறப்பித்தனர்.

அரும்புகளின் சேவை குறித்து சிவஞானம் சிறிதரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். “அரும்புகளில்” கற்க உள்ள 42 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

“வாழ்வில் மேலாம் கல்விதனை கற்றே நாமும் உயர்ந்திடுவோம்”

“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”

முதன்மைச்செயலகம் 
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்
« PREV
NEXT »

No comments