ஈழத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்களின் எழுச்சி வடிவமாக விடுதலை இயக்கமாக புலிகளை மக்கள் பார்க்கிறார்கள். தமிழீழ மக்களின் விடுதலை வேண்டி போராடிய இயக்கங்களில் தங்களுடைய இலச்சியத்தை என்றுமே விட்டுகொடுக்காமல் சுகந்திர தாகத்துடன் இறுதிவரை போராடும் தமிழீழ இயக்கமாக இன்று வரை புலிகளே இருக்கிறார்கள். இவர்களின் தியாகங்கள் தமிழ் தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே அழியாமல் நிலைத்திருக்கும். தமிழ் மக்களை உலகுக்கு உணர்த்திய புலிகளை தமிழர்களின் மனங்களின் இன்றுமே நிலைத்திருக்க வைத்தவர்கள் விதையாகி விதையாகி போன போன பல ஆயிரம் மாவீரர்கள் ஆகும் .இவர்களின் நினைவுகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தமிழர்களின் நெஞ்சங்களின் என்றுமே நிலைத்திருக்கும்.
மாவீரர் மீளாத்துயில் கொள்ளும் இடங்களை அழித்தாலும் அவர்களின் நினைவுகள் எங்களை விட்டு விலகாது. இந்த மாவீரர்களின் வரிசையில் இடம்பிடித்த தீவுப்பகுதி மண் பெற்றெடுத்த வீரவேங்கை நிலமங்கையும் ஒருத்தி
யாழ்ப்பாணத்தில் தீவுப்பகுதியில் சரவணை என்னும் அழகிய கிராமத்தில் சிவாஜினி என்னும் பெயரில்உதித்தவள்தான் நிலமங்கை இவள் சிவகுருநாதன் இந்திராணி தம்பதியர்களுக்கு மூன்றாவது மகளாக வந்து பிறந்தாள் .சிங்கள இராணுவ படையெடுப்புகளால் பல இடப்பெயர்வுகளை சந்தித்த தமிழ் மக்களுடன் இவள் குடும்பமும் பல இடப்பெயர்வுகளை சந்தித்து வன்னியில் குடியேறியது.
1997ல் விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட இவள் நிலமங்கை பெயர்கொண்டு யெஜசிக்குரு பெரும் சமர்களில் தன்னை ஈடுபடுத்தி இராணுவத்துக்கு பல இழப்புக்களை கொடுத்தாள். இவளின் திறமை கண்டு சோதியா படையணியின் சிறப்பு படைக்கு மாற்றப்பட்டாள்.சோதியா படையணில் இணைக்கப்பட்ட நிலமங்கை, காரிகை (துரைசிங்கம் குமுதினி )யும் இணைபிரியாத நண்பிகளாக சண்டைகளங்களிலும் பாசறைகளிலும் விளங்கினார்கள். 08.06.1998 அன்று பரந்தனில் சிங்கள இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் நிலமங்கை,காரிகை உட்பட பதினாறு வேங்கைகள் தங்களின் இன்னுயிர்களை இந்த மண்ணின் விடுதலைக்காக ஆகுதியாக்கிகொண்ட்டார்கள்.
இணைபிரியா இரண்டு நண்பிகளும் வித்தாகும் போதும் இணைந்தே வித்தாகி போனார்கள்.
நினைவு பகிர்வு
சரவணை மைந்தன்
No comments
Post a Comment