Latest News

May 29, 2015

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர் – விஜயகலா
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு பெண்கள் மிகுந்த பாதுகாப்பினை உணர்ந்ததாக பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் கூட பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பான முறையில் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல வன்முறைகளை கடந்த அரசாங்கம் ஊடகங்களில் வெளியிடப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய அரசாங்கம் எவ்வித ஊடகத் தணிக்கைகளையும் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் காணப்படுவதனால் வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையும், படுகொலையும் அம்பலப்படுத்தப் பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் காவல்துறையினருக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும், படையினரே கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சிவிலியன் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இன்னமும் காவல்துறையினர் வினைத்திறனாக செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments