Latest News

May 29, 2015

நேர்மையாக கடமை செய்தமையால்தான் மட்டக்களப்பு சமூக சேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டாரா?
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
மண்டூர் பிரதேசம் நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களையே பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகத்தில் இருந்த சிலர் உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

கொலை செய்வதற்கு வந்திருந்தபோதும் வழக்கை வாபஸ் பெற்று சமாதானமாக செல்லுமாறு கொலையாளிகள் கேட்டுக்கொண்டிருந்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகத்தர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு பேச்சு வார்த்தையில் ஈடுபடுகொண்டிருந்தபோதே கொலையாளிகள் சமூக சேவை உத்தியோகத்தர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அண்மையில் அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய மோட்டார் சைக்கிளிலேயே வந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் சுட்ட துப்பாக்கி நவீன ரக கைத் துப்பாக்கி (மைக்ரோ பிஸ்டல்) என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. தலையில் சுடப்பட்டதனால் இரத்தக்கசிவு மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு பக்கத்தில் சுட்டபோது குண்டு மறுபக்கம் வந்துள்ளாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சாதாரண துப்பாக்கி அல்ல என்றும் அது உயர்மட்டங்களால் பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்றும் கூறப்படுகிறது. இந்தக் கொலையுடன் பல்வேறு இடங்களிலுள்ள நபர்கள் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிகப்பட்டுகிறது.

நவீன ரக துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிந்துள்ளமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை திணிக்க சிலர் முற்படுவதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படுகொலை மட்டக்களப்பு மாவட்டத்தை பெரும் அதிரச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறியுள்ள பா. அரியனேந்திரன் இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நல்லாட்சியில் மக்கள் தலை நிமிர்வுடன் இருக்கலாம் என எதிர்பார்த்த நிலையில் மட்டக்களப்பில் ஆயுத வன்முறைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக  கூறியுள்ள முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் குற்றவாளிகளை அரசு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சமூக சேவை உத்தியோத்தரது கொலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற குரல்கள் உள்ளூர் ஊகடங்களில் வலுப்பெற்று வருகின்றன.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? பின்னணியில் உள்ளவர்கள் அம்பலப்படுவார்களா? நீதி நிலைநாட்டப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். 
« PREV
NEXT »

No comments