Latest News

May 15, 2015

யுத்தத்தை தாங்களே வென்றோம் என்பவர்களுடன் இதயத்தால் இணைந்த சுமத்திரன்
by admin - 0

தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய பொது விவாதம் ஈரோவில் மாநாட்டு மண்டபத்தனில் நடந்திருந்தது.

சுமார் நான்கரை மணித்தியாலங்கள்  விவாதம் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. 

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் தீர்வென தெரிவித்திருந்தார்.ஆனால் சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என சுமந்திரன் தெரிவக்க ஏன் இணையமுடியாதென்பதற்கு கஜேந்திரகுமார் விளக்கமளித்திருந்தார்.
 
சிங்கக்கொடி விவகாரம் மற்றும் இலங்கை சுதந்திரதினத்தினில் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு சுமந்திரன், தான் சட்டத்தரணி என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்களை முன் வைத்திருந்தார் .

சம்பந்தனின் தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டும் என நாம் ஏன் கேட்கவேண்டும் அதைக்கேட்கிறோம் ? அதை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லவா அதேபோலத்தான் தேசியக்கொடியை ஏற்கத்தான் வேண்டும் என்றார்
இலங்கையின் தேசியக்கொடியை தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஆனால் ஒரு நாட்டின் கொடி என்றவகையினில் ஏற்றுக்கொள்வதாக தெரிவத்தார்.
அதற்காகவா சம்பந்தன் அதனை கையினில் வைத்து ஆட்டினார் என்ற கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கவில்லை.
 
மஹிந்த ஆட்சியினை மாற்றி நாங்கள் சென்றுகொண்டிருக்கும் படகினை கூத்தடித்து கவிழ்க்க வேண்டாமென்று சுமந்திரன் கேட்டுக்கொண்டதுடன் புதிய அரசுடன் இதயத்தால் இணைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் மைத்திரி அரசாங்கத்துடன் பேச்சளவில் செய்யப்பட்ட உடன்படிக்கை குறித்து தேர்தலுக்கு முன்பாக கூட்டமைப்பு வெளியிடும் என்றும் சுமந்திரன் கூறினார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றிய கஜேந்திரகுமார் யுத்தத்தை தானே இறுதி நாட்களினில் மூன்று வாரம் பாதுகாப்பு அமைச்சராக இருந்து முடித்து வைத்ததாக ஜனாதிபதி மைத்திரி சொல்கின்றார்.
சந்திரிகாவோ யுத்தத்தின் 75சதவீதத்தை தானே முடித்து வைத்ததாக சொல்கின்றார்.பிரதமர் ரணிலோ கருணாவை பிரித்து புலிகளினை பலவீனப்படுத்தியதாக கூறுகின்றார்.
அதேவேளை இராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவோ இவர்கள் அனைவரும் குளிரூட்டிய அறையினுள் இருந்தனர்.நானே யுத்தத்தை வென்றேன் என்கின்றார்.
அவ்வாறானவர்களுடன் நட்பு பாராட்டி இதயத்தால் பிணைந்துள்ளவர்கள் பற்றி சந்தேகிக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments