இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி கோரி, தமிழகத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்திலுள்ள, இலங்கை வர்த்தக நிறுவனங்களை மூடுமாறும் இதன்போது வலியுறுத்தி, அந்த நிறுவனங்களின் முன்பாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் இறுதிப் போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாள்கள் இவை. இந்த நாள்களில் அந்த மக்களுக்காகவும், அவர்களது படுகொலைகளுக்காகவும் நீதி கேட்கவேண்டும். 6 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை. அத்துடன், தமிழக அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்ற வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
இலங்கையின் உற்பத்திப் பொருள்கள், இலங்கை நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்தும் செயற்படுவதனை தடை செய்யவேண்டும். அந்த நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகத்தில் இன்று முதல் தொடர்ச்சியாகப், பரவலாக, கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தமிழக மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் தெரிவித்துள்ளன.
No comments
Post a Comment