Latest News

May 23, 2015

வித்தியா; வடக்கில் போட்டி அரசியல் நடத்த கிடைத்த துரும்பல்ல!
by Unknown - 0

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமையை வைத்துக் கொண்டு வடக்கில் அரசியல் ரீதியாகத் தமது காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தி லாபமீட்ட முனையும் சில அரசியல்வாதிகளின் செயற் பாடு களை வடக்கு புத்திஜீவிகள் கடுமையாகக் கண்டித் துள்ளனர்.

கொலைகாரர்கள் இவர்கள் தான் என ஏறத்தாழ இனங்காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் சில அரசியல்வாதிகள் தமது பழைய அரசியல் பகைகளைத் தீர்த்துக் கொள்ளவும், சிலர் அரசியல் பிரசாரம் தேடவும் அப்பாவிச் சிறுமியான வித்தியாவின் மரணத்தைப் பயன்படுத்தி வருவதை புத்திஜீவிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

வடக்கிற்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்கள், அரசியல் தலைவர்கள் வித்தியாவிற்காக காட்டும் அனுதாபத்தைக் கூட வடக்கிலுள்ள சில அரசியல் தலைமைகள் காட்டவில்லை எனவும், இந்தச் சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதிலேயே இவர்கள் குறியாக இருப்பதா கவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் யாழ் குடாநாடு என்ற எல்லை தாண்டி வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் என்பது சமூக நீதிக்கானது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை வித்தியாவுக்கு நடந்த கொடுமைத்தனம் இனிமேல் எங்கும் இடம்பெற லாகாது.

இதனை உறுதி செய்வதற் காக குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதா கும். எனவே, இது தொடர்பில் அரசும் நீதிபரிபாலனமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவே ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை தடுக்க முடியும்.

இதேநேரம் யாழ்ப்பாண நகர மையத்தில் நடந்த ஆர்ப் பாட்டங்களின்போது இளை ஞர்கள் சிலர் நடந்துகொண்ட முறை மிகப்பெரிய அதிர்ச் சியைத் தந்தது.

இளைஞர்களின் ஆர்ப்பாட் டமும் கண்டனப் பேரணிகளும் ஆரம்ப கட்டங்களில் மனதை உருக்கக் கூடியதாக இருந்தது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. எனினும் நேரம் செல்லச் செல்ல ஆர்ப்பாட்டத்தில் செருகிக்கொண்ட இளைஞர்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர்.

இத்தகையதொரு பொறுப்பற்ற செயல் என்பது தமிழ் மண்ணில் இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் இல்லை என்பதை உணர்த்தி நின்றது.

அதிலும் குறிப்பாக அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட் டங்கள் பற்றிய விளக்கமின்மை இளைஞர்களிடம் அதீதமாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பகுதியினரிடம் இனம் புரியாத கோபம் காணப்பட்டது.

இந்தக் கோபம் எதற்கானது என்பது தெரியவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் அரசியல் பணியை செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

தமிழ் அரசியல் கட்சி சார்ந்து இளைஞர் அணிகள் உருவாக்கம் பெற்றிருந்தால் எழுந்தமானமான கலகங்கள் ஏற்படுவதற்கு இடம் இருந்திருக்காது. தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது இங்கு தெளிவாகிறது.


நன்றி தினகரன் 
« PREV
NEXT »

No comments