Latest News

May 06, 2015

பாராளுமன்றை கலைப்பது தொடர்பில் ஐதேக - ஶ்ரீசுக இடையே முரண்பாடு!
by admin - 0

பாராளுமன்றை கலைக்க பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்த போதும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிலர் 20ம் திருத்தத்தை பாராளுமன்றில் நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க கூடாதென தெரிவித்துள்ளனர்.

2002ம் ஆண்டுக்குப் பின் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளதால் ஐதேக ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ள நிலையில் உடன் பாராளுமன்றை கலைத்து தேர்தலுக்குச் செல்வதை ஐதேக தலைமை விரும்புகிறது. மேலும் செப்டெம்பர் மாதம் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் போர்க்குற்ற அறிக்கை வெளியிடுவதற்கு முன் இனவாதிகள் அற்ற தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது ஐதேகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் 90% வாக்குகள் பெற்று 19வது திருத்தத்தை நிறைவேற்றிய போன்று 20ம் திருத்தத்தையும் நிறைவேற்றி பின் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி எண்ணியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் மஹிந்தவின் செல்வாக்கு இல்லாது போய் கொண்டிருக்கும் நிலையில் தன்னை இன்னும் பலப்படுத்திக் கொண்டு செப்டெம்பர் அளவில் தேர்தல் நடத்த ஜனாதிபதி விரும்புகிறார். மஹிந்த ஆதரவாளர்களிடம் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டு தன்னுடைய பலத்தை நிரூபிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியை கடந்த மே தின கூட்டத்தில் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »

No comments