Latest News

May 13, 2015

பிரித்தானியாவை சீண்டும் ரஷ்யா-போர் மூலுமா?
by admin - 0

ரஷ்யாவின் வேவு விமானங்கள் பிரித்தானிய கடல்கரை ஓரங்களில் பறப்பில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதால் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. நேற்றைய தினம்(12) எஸ்டோனியாவுக்கு அருகே நேட்டோ படயினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை அப்பகுதியில் ரஷ்ய விமானம் ஒன்று வேவுபார்ப்பது ராடர் திரையில் தெரிந்துள்ளது. உடனே பிரித்தானியாவின் டைஃபூ ரக போர் விமானங்கள் 2 அவ்விடத்தை நோக்கிச் சென்றுள்ளது. இதில் விவகாரமான விடையம் என்னவென்றால் , ரஷ்யாவின் வேவு பார்கும் விமானம் பலத்த ஆயுதம் தாங்கிய விமானமாக உள்ளது. அதில் அணு குண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் உள்ளது என்கிறார்கள்.

அதுபோக அவ்விமானங்கள் பல மணி நேரம் பறப்பில் ஈடுபடவல்லவை. மேலும் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் திறன்வாய்ந்தவை. பிரித்தானியாவின் டைஃபூ ரக போர் விமானங்கள் ஏவும் லேசர் ஏவுகணையை , ரஷ்ய வேவு விமானத்தில் உள்ள கருவிகள் திசை திருப்ப வல்லவை. அதுபோக வெப்பத்தை அல்லது ஒலியை பிந்தொடர்ந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை சமாளித்து , அது கிட்ட நெருங்கு முன்னரே வானில் வெடிக்க வைக்க சில கருவிகளை ரஷ்யா தனது வேவு விமானத்தில் பொருத்தியும் உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் , குறித்த ரஷ்ய விமானத்தை பிரித்தானியாவின் டைஃபூ ரக விமானங்கள் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விடையம்.

இருப்பினும் இந்த போர் விமானங்கள் குறித்த பகுதிக்கு செல்ல சற்று முன்னரே ரஷ்ய வேவு விமானம் சர்வதேச எல்லைக்குள் சென்றுவிட்டது. இது வழமையாக தற்போது பல தடவைகள் நடந்துவிட்டது. இதனால் போர் மூழும் அபாயம் தோன்றியுள்ளது. ரஷ்ய வேவு விமானத்தில் உள்ள விமான தற்செயலாக அணு குண்டு ஏவுகணையை ஏவினால் அது பெரும் போர் ஒன்றை தோற்றுவிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.



« PREV
NEXT »

No comments