தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் என்றால் நம் நினைவிற்கு வருவது ராஜ்கிரண் தான். இவர் நடிப்பில் வெளிவந்த தவமாய் தவமிருந்து, கிரீடம், காவலன், வேங்கை ஆகிய படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவை.
இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் பிரபாகரன் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நாம் சுதந்திரம் வாங்கிய போது காந்தியடிகள் ஒரு பெண் நள்ளிரவில் எந்த துணையும் இல்லாமல் தனியாக சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புகிறாளோ, அன்று தான் முழு சுதந்திரம் என கூறினார்.
இப்படி ஒரு நல்ல ஆட்சியை இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பிரபாகரன் நடத்தி வந்தார், இது பல பேருக்கு பிடிக்காமல் அவர் ஆட்சியை ஒன்று சேர்ந்து அழித்து விட்டனர்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
No comments
Post a Comment