சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ் வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் உலகத் தமிழர் பேரவையிடமும் முன்வைத்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலையினை எக் காரணத்துக்காகவும் பேச்சுக்களின் ஊடாக வலுவிழக்கச் செய்து விடாதீர்கள். சிறிலங்கா அரசின் மீதான தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தை அரசு தர முயலும் அற்ப சலுகைகளைக் காட்டித் தணிப்பதற்கு முயலாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள் என சமீபத்தில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் நிறைவு நாள் உரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மேலும் அவ்வேண்டுகோளில், மக்களின் தார்மீகக் கோபமே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நம்தேசம் கொண்டிருக்கும் வலுவான அடிப்படையாகும். இங்கு மக்களின் தார்மீகக் கோபம் நிலைப்பது நன்லிணக்கத்துக்கு இடையூறானது எனச் சிலர் கருதக் கூடும்.
எம்மைப் பொறுத்த வரையில் நாம் அவ்வாறு பார்க்கவில்லை.
நீங்கள் பேச்சுவார்த்தை முயற்சிகளில் அடையும் தோல்விகள் எங்கள் மக்களின் தார்மீகக் கோபத்தை இன்னும் வலுப்படுத்தும் எனவே நாம் நம்புகிறோம்.
நாம் சிங்கள தேசத்துடனான நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களல்ல.
உண்மையில் அதனை நாம்; பெரிதும் விரும்புகிறோம். ஆனால் இவ் நல்லிணக்கம் தமிழீழ மக்கள் ஒரு சுதந்திரமாக வாழ்வுக்குரிய உரிமை கொண்ட மக்கள் என்ற நிலையில் இருந்து எட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
ஒடுக்கப்பட்டவர்களாக, சமத்துவம் அற்றவர்களாக, எமது பாதுகாப்பை நாமே தீர்மானிக்க முடியாதவர்களாக, எமது பிரதேசங்களைப் பாதுகாத்து மேம்பாடு அடையச் செய்ய முடியாதவர்களாக, ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவத்தின் மத்தியில் வாழும் மக்களாக, சிங்கள அரசின் இனஅழிப்புக்கு உள்ளாகும் மக்களாக, எமது விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்த போராளிகளுக்கு வணக்கம் செலுத்த முடியாதவர்களாக, இனஅழிப்பு யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த உறவுகளை, மக்களை சுதந்திரமாக நினைவுகூர முடியாதவர்களாக, அடிமைப்படுத்தபட்ட மக்களாக நாமிருக்கும்வரை எந்தவித
நல்லிணக்கமும் உருவாக முடியும் என நாம் கருதவில்லை.
எமது மக்களின் நெஞ்சங்களில் கனலும் நெருப்பு நாம் விடுதலை அடைந்த மக்களாக, எமது அரசியல் தலைவிதியை நாமே தீர்மானித்து வாழும் ஓர் அரசியல் ஏற்பாடு எட்டப்படும் போதே தணியும்.
அப்போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். இதுவே நல்லிணக்கம் தொடர்பாக எமது நிலைப்பாடு.
இவ் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பின்வரும் இலக்குகளை உள்ளடக்கியவாறு தொடரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.
2. சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையும் எனும் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.
3. இனஅழிப்பைத் தடுப்பதற்குரிய பரிகாரநீதி என்பதன் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்காக உழைத்தல்.
4. சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உழைத்தல்.
5. ஈழத் தமிழர் தேசத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தளங்களில் வலுப்படுத்த உழைத்தல்.
6. உலகில் வாரும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழ் மக்களை உலகில் ஒரு வலுமையமாக ஆக்க உழைத்தல்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது முழுமையான அறிக்கை :
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
கடந்த மூன்று நாட்களாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது அமர்வில் நாம் உற்சாகத்துடன்; கூடியிருந்து ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசியும் விவாதித்துமுள்ளோம்.
ஜேர்மன் நாட்டில் டோற்முன்ட் நகரில் நடைபெற்ற இந்த அமர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. பங்கு பற்றிய அரசவை உறுப்பினர்களும் மக்களும் இந்த அமர்வைப் பயனுள்ள வகையில் அமைவதற்கான உங்கள் பங்களிப்பை நிறையவே வழங்கியிருக்கிறீர்கள்.
இவ் அமர்வில் அரசவை உறுப்பினர்கள் பொறுப்புடனும் சிந்தனைத்தெளிவுடனும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். ஜனநாயக வழியில் செயற்படுவவதற்கு தகமை கொண்டவர்களாக நாம் எம்மை நிலைநிறுத்தியுள்ளோம் என்பதனை இவ் அமர்வு மீண்டுமொருமுறை உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த அமர்வில் பங்கு பற்றிய பேராசிரியர் பீடர் ஷால்க், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவல் அடிகளார், பிரான்ஸ் நாட்டு சட்டவாளரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் உறுதியான ஆதரவாளருமான ஜில் பிக்குவா ஆகியோர் தமது கருத்துரைகளினால் இம் அமர்வுக்குச் சிறப்புச் சேர்த்திருந்தார்கள். அமர்வில் வழங்கப்பட்ட நடன நிகழ்வு தமிழர்தம் பண்பாட்டுச் செழுமையை வெளிப்படுத்தி நின்றது. ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் குறித்த கருத்தாடல் தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த அமர்வை சிறப்பாக நடாத்தியமைக்காக அமர்வை ஏற்பாடு செய்த ஜேர்மன் நாட்டு அரசவை உறுப்பினர்கள், அமர்வைத் தலைமை தாங்கிய அவைத்தலைவர் கலாநிதி தவேந்திரராஜா, பங்கு கொண்டு தமது கருத்துக்களை முன்வத்த அரசவை உறுப்பினர்கள், ஆதரவுப் பின்பலம் தந்த ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள், நடன நிகழ்வை வழங்கிய கலைஞர்கள், இந் நிகழ்வின் வெற்றிக்குக் காத்திரமான பங்கை வழங்கிய போராசிரியர் சிறிஸ்கந்தராஜா, பேராசிரியர் பீடர் ஷால்க், இம்மானுவல் அடிகளார், சட்டவாளர் ஜில் பிக்குவா, ஊடகவியலாளர்கள் – உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நிறைவுரையில் இவ்வரங்கில் கருத்துக்களை முன்வைத்த பேராசிரியர் ஷால்க்;;, இம்மானுவல் அடிகளார், சட்டவாளர் ஜில் பிக்குவா ஆகியோர் முன்வைத்த சில கருத்துக்களைப் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
பேராசிரியர் பீடர் ஷால்க் பற்றி ஒரு குறிப்பையும் சொல்லியாக வேண்டும். பீடர் ஷால்க் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் நீண்ட பயணத்தில் இணைந்து பயணித்து வருபவர். பல முனைகளில் அதற்காக அவதூறுகளையும் சகித்துக் கொண்டு இன்றும் தனது ஆய்வுகளை தமிழ் இன விடுதலை சார்ந்த தலைப்புகளில் செய்து வருகிறவர்.
இந்த அமர்வில், எமது முள்ளி வாய்க்கால் நினைவுகள் பசுமையாய் எம் நெஞ்சில்; இருக்கும் இந்நாட்களில் நாம் துக்கம் காக்கும் உரிமை ஏன் தாய்மண்ணில் எமக்கு மறுக்கப் பட்டு வருகிறது என்பதனை அறிவுபூர்வமாக பகுத்தாய்வு செய்து ஆழமான உரையினை வழங்கி இருந்தார்.
Disenfranchisement of the Right to Mourn என்பது வரலாற்றுக்குப் புதியதல்ல என்பதும,; அடக்குமுறை ஆட்சி செய்யும் சிங்களம் எமது உரிமையை மறுப்பதன் மூலம் தன்மீதுள்ள பெருங் குற்றச் சாட்டுகளை மறைக்கவே முயல்கிறது என்றும்;, அவர்களது தடைகளை மீறி நாம் அஞ்சலி செலுத்தும் போதெல்லாம் நாங்கள் நடந்தவற்றை உலகத்தினது மனச் சாட்சியின் முன் கொண்டு வருகிறோம், சிங்களத்தின் மீதுள்ள குற்றச் சாட்டுகளை நீதி கிடைக்கும் வரை அழுத்தமாக அவர்கட்கும் எமக்கும் நினைவூட்டி வருகிறோம் என்பதும் ஷால்க் அவர்களின் உரையில் வலுவுடன் முன்வைக்கப் பட்டன.
இம்மானுவல் அடிகளார், எமது புனிதர்களை அகத்தில் வைக்கும் ஒவ்வொரு ஆன்மிகம் மிக்க அக வணக்கச் செயல்பாடும் கூட நாம் எம்மை அடக்குபவர்கட்கு எதிரான அரசியல் செயற்பாடாகவும் அமைவது நாம் நினைவில் கொள்ள வேன்டியதாகுமெனக் குறிப்பிட்டார்;. எம்மைப் புனிதப் படுத்தவும், எமது கடமைகளை, எமக்கான விடுதலை நோக்கிய பொறுப்புகளை நாம் மனச் சுத்தியோடு செய்வதற்கும்;, இவை எல்லாவற்றையும் ஆன்மீகக் கடமைகளாகவே நாம் மனதில் பதித்துச் செய்யவேண்டும் என்பதனை அடிகளார் நினைவூட்டினார். வெறும் மதம் சார்ந்த சடங்குகளை விட உண்மையான ஆன்மீகம் மிக்க பணிகளில் ஒன்றாகவே எமது பொதுப் பணிகளும் அரசியல் பணிகளும் கணிக்கப் படவேண்டும் என்ற அடிகளாரினது கூற்று எமக்கெல்லாம் புதிய வகையில் எம்மைத் தயார் படுத்த வழி செய்கிறது.
சட்டவாளர் ஜில் பிக்குவா நீதியும் சமாதானமும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதனை வலியுறுத்தினார். அநீதி நடந்த இடத்தில் நீதி பெறப் படாதவரை அமைதியோ சமாதானமோ நிலைக்க முடியாது. எனவே தான் எமது இனத்துக்கு இழைக்கப் பட்ட அநியாயங்களுக்கான பரிகாரமாக நீதி பெறப் படவேண்டும், நீதிக்கும் சமாதானத்துக்குமான இரண்டு முயற்சிகளும் இரு போராட்டங்களும் ஒரே நேரத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டியவை. எல்லா அரசியல் முனைப்புகளும் எல்லா அரசியல் தலைமைகளும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுக்காக மற்றதனைக் கைவிடவோ வேகம் குறைய விடவோ முடியாது என்பதனை சட்டவாளர் ஜில் பிக்குவா வலியுறுத்தியமை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறது என்பதனை உறுதிப்படுத்தியது.
சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் ஊடாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படமுடியாது என்பதனை நான் எனது ஆரம்ப உரையில் வலியுறுத்தியிருந்தேன்.
தமிழ் மக்களின் உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பதனைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதிலும் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டியவர்களாகத் தமிழர் தேசம் உள்ளது எனவும் சுட்டிக் காட்டியிருந்தேன்.
அப்படியானால் நாம் எவ்வாறு முன்னோக்கி நகர்வது? எமது கோரிக்கைகளுக்கு அனைத்துலக ஆதரவைப் பெறுவது எவ்வாறு? ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசமாக வலுப்படுத்துவது எவ்வாறு? இதற்கான வளங்களைத் திரட்டிப் பெருக்குவது எவ்வாறு? போன்ற கேள்விகளை நாம் புதிய அரசியற்சூழலில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தேன்.
இந்த அமர்வு இவை குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்திருந்தது. சிறிலங்கா அரசு எமது மக்களுக்கு நீதியுடன் கூடிய உரிமைகளை வழங்கும் என்பதனை நாம் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். சிறிலங்கா அரசின் மீது தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதனைப் பிரகடனம் செய்கிறோம். இலவு காத்த கிளிகளாக நாம் இருக்க முடியாது என்பதனை முரசறைகிறோம். வரலாற்றை நாம் வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிப்படுத்துகிறோம்.
இத்தகையதொரு சூழலில் சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க விரும்புகிறோம். இதே வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் உலகத் தமிழர் பேரவையிடமும் முன்வைக்க விரும்புகிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலையினை எக் காரணத்துக்காகவும் பேச்சுக்களின் ஊடாக வலுவிழக்கச் செய்து விடாதீர்கள். சிறிலங்கா அரசின் மீதான தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தை அரசு தர முயலும் அற்ப சலுகைகளைக் காட்டித் தணிப்பதற்கு முயலாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள்.
மக்களின் தார்மீகக் கோபமே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நம்தேசம் கொண்டிருக்கும் வலுவான அடிப்படையாகும். இங்கு மக்களின் தார்மீகக் கோபம் நிலைப்பது நன்லிணக்கத்துக்கு இடையூறானது எனச் சிலர் கருதக் கூடும். எம்மைப் பொறுத்த வரையில் நாம் அவ்வாறு பார்க்கவில்லை.
நீங்கள் பேச்சுவார்த்தை முயற்சிகளில் அடையும் தோல்விகள் எங்கள் மக்களின் தார்மீகக் கோபத்தை இன்னும் வலுப்படுத்தும் எனவே நாம் நம்புகிறோம்.
நாம் சிங்கள தேசத்துடனான நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களல்ல. உண்மையில் அதனை நாம்; பெரிதும் விரும்புகிறோம். ஆனால் இவ் நல்லிணக்கம் தமிழீழ மக்கள் ஒரு சுதந்திரமாக வாழ்வுக்குரிய உரிமை கொண்ட மக்கள் என்ற நிலையில் இருந்து எட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
ஒடுக்கப்பட்டவர்களாக, சமத்துவம் அற்றவர்களாக, எமது பாதுகாப்பை நாமே தீர்மானிக்க முடியாதவர்களாக, எமது பிரதேசங்களைப் பாதுகாத்து மேம்பாடு அடையச் செய்ய முடியாதவர்களாக, ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவத்தின் மத்தியில் வாழும் மக்களாக, சிங்கள அரசின் இனஅழிப்புக்கு உள்ளாகும் மக்களாக, எமது விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்த போராளிகளுக்கு வணக்கம் செலுத்த முடியாதவர்களாக, இனஅழிப்பு யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த உறவுகளை, மக்களை சுதந்திரமாக நினைவுகூர முடியாதவர்களாக, அடிமைப்படுத்தபட்ட மக்களாக நாமிருக்கும்வரை எந்தவித நல்லிணக்கமும் உருவாக முடியும் என நாம் கருதவில்லை.
எமது மக்களின் நெஞ்சங்களில் கனலும் நெருப்பு நாம் விடுதலை அடைந்த மக்களாக, எமது அரசியல் தலைவிதியை நாமே தீர்மானித்து வாழும் ஓர் அரசியல் ஏற்பாடு எட்டப்படும் போதே தணியும்.
அப்போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். இதுவே நல்லிணக்கம் தொடர்பாக எமது நிலைப்பாடு.
இவ் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பின்வரும் இலக்குகளை உள்ளடக்கியவாறு எட்டு; வகைகளில் தொடரும்.
1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.
2. சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையும் எனும் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.
3. இனஅழிப்பைத் தடுப்பதற்குரிய பரிகாரநீதி என்பதன் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்காக உழைத்தல்.
4. சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உழைத்தல்.
5. ஈழத் தமிழர் தேசத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தளங்களில் வலுப்படுத்த உழைத்தல்.
6. உலகில் வாரும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழ் மக்களை உலகில் ஒரு வலுமையமாக ஆக்க உழைத்தல்.
இந்த இலக்குகளை அடைய நாம் வகுத்துள்ள செயற்றிட்டங்கள் குறித்து இம் அமர்விலும் கூடி விவாதித்துள்ளோம்.
ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம,Yes to Referendum, அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், பதிப்பகம், ஆவணக்காப்பகம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள், தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் – சூழல் விழிப்புணர்வு இயக்கம், உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அமையும். இப் பெரும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளதையும் இவ் அமர்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
தோழர்களே!
இப்போது நாம் இந்த அமர்வை நிறைவு செய்யும் நேரம் நெருங்கி விட்டது.
தெளிவான கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட செயலும், அச் செயலை நிறைவேற்றி முடிக்கும் ஆற்றலும் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுக்கும். போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பங்காற்றும்.
மாவீரர் கனவை நெஞ்சில் சுமந்தவாறு எமது கடமைகளை நாம் செயல் முனைப்புடன் ஆற்றுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
No comments
Post a Comment