சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் கையெழுத்துப் போராட்டத்தில் மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் டி.ஆர். மேடி தன்னையும் இணைத்துள்ளார்.
உலகின் பல்வேறு சமூக - அரசியல் விவகாரங்களை கருத்துச் சித்திரங்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வேறு வரைகலை வடிவங்களின் ஊடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளவர் டி ஆர்.மேடி அவர்கள்.
320க்கும் மேற்பட்ட கார்ட்டூனிஸ்ட்கள் அங்கம் வகிக்கும் http://www.cartoonmovement.com/p/7505 கார்ட்டூன் இயக்கத்தின் இணையத்தளத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை சிறிலங்கா நோக்கி நகர்த்துவதாக கூறியம் கருத்துச் சித்திரத்தினை வெளிக்கொணர்ந்துள்ளார்.
சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் கையெழுத்து இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
15க்கும் மேற்பட்ட மொழிகளில் www.tgte-icc.org இணையத்தளத்தின் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற இந்நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் டி.ஆர்.மேடியின் இக்கருத்துச் சித்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
No comments
Post a Comment