தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள்.
குறித்தவாராக இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் இளவாலை புனித அந்நாள் ஆலய முன்றலில் அலையென திரண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் தனது சாதனை முயற்சி ஆரம்பிக்கபட்டது.
முதலில் 1மணி நேரம் தலை கீழாக நின்று சாதனை படைக்க போவதாக கூறி சாதனை முயற்சியை ஆரம்பித்த திரு.இராசேந்திரம் அவர்கள் வெகு இலகுவாக இலக்கை நிறைவு செய்து அதாவது 1 மணி நேரம் தலை கீழாக நின்று தனது முதாலவது சாதனையை இலங்கை சாதனையாக பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து முட்டை குடித்தலில் உலக சாதனை படைக்கும் நோக்குடன் தனது முயற்சியை ஆரம்பித்த இவர் 5 நிமிடங்களில் 60 முட்டைகளை குடித்து தான் ஏற்கனவே நிலைநாட்டி இருந்த இலங்கை ரீதியான சாதனையான 53 முட்டைகள் குடிப்பு என்ற சாதனையை தகர்த்து புதியதோர் இலங்கை சாதனையை நிலை நாட்டினார்.
எனினும் அடுத்த அடுத்த முயற்சிகளில் தான் 1௦௦ முட்டைகளிலும் அதிகமான முட்டைகளை குடித்து உலக சாதனை படைப்பேன் என நம்புவதாக கூறினார்.
மேலும் தனது இன்னுமொரு முயற்சியாக பாக்குநீரிணை மூலமாக இலங்கையில் இருந்து இந்தியா வரை நீந்திசெல்லும் சாதனையையும் படைக்கபோவதாக கூறினார்.

No comments
Post a Comment