தமிழக அரசைக் கலைக்க வேண்டுமெனவும் மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசில், மின் துறை, கோக கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது, உயர்கல்வித் துறை, ஆவின், நெடுஞ்சாலைத் துறை, தாதுமணல் உள்ளிட்ட 25 துறைகளில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஆதாரங்களை தொகுத்து தமிழக ஆளுனர் ரோசைய்யாவிடம் அளிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.
பேரணியின் முடிவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட சுமார் பதினைந்து பேர் ஆளுனர் மாளிகையில் ஆளுனரைச் சந்தித்து இந்த ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த ஊழல்களுக்கான ஆதாரத்தை ஆளுனரிடம் அளித்திருப்பதாகவும் அதை இப்போது வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நடந்த காங்கிரஸ் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரணியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன் துவக்கிவைத்தார்.
No comments
Post a Comment