குருநாகலில் நேற்று இடம்பெற்ற மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றமையை அடுத்தே இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்கேற்றார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்கேற்கவில்லை.
எனினும் இரண்டு கட்சிகளிடையேயும் பிளவு தோன்றியுள்ளமையை இது எடுத்துக்காட்டுவதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டபோதும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவருக்கு ஏற்பட்ட தோல்வி அவரை அரசியலுக்குள் மீண்டும் புகுத்தியுள்ளது.
பிரதமர் வேட்பாளர் என்ற அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமக்கு எதிரான விசாரணையை நிறுத்துமாறும், உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுமாறும் அவர் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
எனவே இந்த விடயங்கள் அவரை தனித்து இயங்க தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment