Latest News

May 10, 2015

எங்கள் அரசு வரட்டும் பார்த்துக்கொள்வோம் -முன்னாள் அமைச்சர்
by admin - 0

தற்போது வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நுகர்வோம் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தன்னை சிறையில் பார்க்க வந்தவர்களிடம் 'பொலிஸ் மா அதிபர் கூட நான் கூறுவதை ஏற்றுக் கொள்கிறார். சட்டமா அதிபர் நான் சொல்வதை கேட்கிறார். எந்தவொரு பெரியவரும் என்னிடம் சரண். நான் சொல்வதை ரவி வித்யாலங்கார (நிதி மோசடி பிரிவு பொறுப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்) மாத்திரம் கேட்க மாட்டார். நமது அரசாங்கம் வந்ததும் அவனை கோல்பேஸில் தொங்க விட வேண்டும்' என்று கூறிவருகிறார்.

பசில் ராஜபக்ஷ போன்று கொழும்பு மேர்சன் வோர்ட் பக்கம் போகாமல் இருப்பது ஏன் என ஜோனியை பார்க்கச் சென்றவர்கள் கேட்டுள்ளனர். பசில் ராஜபக்ஷ பணம் கொடுத்து அங்கு பெரும் சொகுசு எனக்கு இங்கு இலவசமாகக் கிடைக்கிறது என்று ஜோனி பதில் அளித்துள்ளார். அதன்படி ஜோனி கையடக்கத் தொலைபேசியைக்கூட தனக்கு அருகில் வைத்திருப்பதாக தெரியவருகிறது. வெளியில் இருந்து மூன்றுவேளை உணவு கிடைக்கிறது. ஒவ்வொரு இரவிலும் ஜோனியின் புண்ணியத்தில் சில கைதிகளுக்கு குடி வர்க்கமும் கிடைப்பதாக எமக்கு கிடைக்கும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


« PREV
NEXT »

No comments