ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு அபயாராமயில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவர் மேலும் தெரிவித்ததாவது யூ.என்.பியுடன் கூட்டு சேர்வதற்கு சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்கள் தற்போது தமது அமைச்சுப் பதவிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் சில அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகும் நிலை காணப்படுகிறது.
அத்துடன் விலகவுள்ளவர்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்து பதவிகளை பெற்றவர்கள் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டு ஒன்றுசேரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment