Latest News

May 06, 2015

சங்கக்காரா ஹரிக்கன்ஸில் விளையாட 2 வருடங்கள் ஒப்பந்தம்
by Unknown - 0


இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா, அவுஸ்திரேலிய உள்ளூர் அணியான ஹார்பட் ஹரிக்கன்ஸில் விளையாட 2 வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணிக்காக விளையாடவுள்ள சங்கக்காரா கூறுகையில், பிக் பாஷ் லீக் போட்டி ஒரு உலகத்தரம் வாய்ந்த போட்டியாகும்.

இது ரசிகர்களுக்கு விருந்தளிக்க கூடியது. உலகத் தரம் வாய்ந்த சில முக்கிய வீரர்கள் இதில் இடம் பெறுகின்றனர். இலங்கை அணியுடன் நான் இங்கு வரும் போது எல்லாம் இந்த சூழ்நிலையை பெரிதும் விரும்புவேன். இங்கு அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கை அணிக்காக 130 டெஸ்ட் போட்டி, 404 ஒருநாள் போட்டி மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்காரா, சமீபத்தில் நடந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments