புதிய அரசு கூட தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து முழுமையாக அதற்குரிய தீர்வுகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நேற்று நவாலிப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்குரிய பல வேலைகளை இன்னமும் புதிய அரசு; செய்யவில்லை. குறிப்பாக சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுவித்திருக்கலாம், காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு ஏதாவது ஒரு வழியை காட்டியிருக்கலாம், வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள குடியமர்த்தியிருக்கலாம் இது போன்ற பல வேலைத்திட்டங்களை செய்திருக்கலாம்.
சம்பூரை இன்னமும் விடவில்லை. கேட்டால் உரிய அதிகாரிகள் அனுமதி தரவில்லை என்கிறார்கள். நான் கேட்கிறேன் அந் நிலத்தை யாருடைய சம்மதத்துடன் எடுத்தீர்கள்;?; அவர்களிற்கு மனமிருந்தால் இடமிருந்திருக்கும்.
பெரும்பான்மை இன அரசு நாம் கேட்டவற்றை எல்லாம் செய்து விடும் என கூறமுடியாது. நாம் இந்த அரசிற்கு ஆதரவு வழங்கியது ஒரு சர்வாதிகாரியை இல்லாமல் செய்வதற்கே. தற்போது எமது தலைமைகள் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை மாற்றுக் கட்சிகள் தவறாக பரப்புரைகள் செய்கின்றனர். இதனை நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் எல்லோருக்கும்; நிலமைகள் விளங்கும் இருந்தாலும் அதனை தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை அதனாலேயே இதனை நான் தெளிவுபடுத்தியிருந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment