Latest News

May 13, 2015

அகதி கொள்கை மாற்றம் குறித்த கருத்துரை-அவுஸ்திரேலியா
by Unknown - 0

அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக வருவோர் தொடர்பான கொள்கை குறித்த 'கன்பரா" கலந்துரையாடல் என்ற பகிரங்க கருத்துரை அமர்வு இந்த வாரத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக, இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாலுக்கு குடிப்பெயர்ந்த சாமா கான் என்ற யுவதியும் இலங்கையிலிருந்து குடிப்பெயர்ந்த ஜீவன் நந்தகுமார் என்ற இளைஞனும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

சாமா கான் அவுஸ்திரேலியாவில் வாழும் முஸ்லிம்களின் இரண்டாம் பரம்பரையை சேர்ந்தவராகும்.

இவரின் பெற்றோர் இந்தியாவில் இருந்து குடிப்பெயர்ந்தவர்களாவர்.

ஜீவன் நந்தகுமாரின் பெற்றோர் 1980 முதல் 90 ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் அவுஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்தவர்கள்.

இந்தநிலையில், குறித்த கருத்தமர்வில் இலங்கையில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கான காரணங்கள் அவர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்க வேண்டிய மனிதாபிமான உதவிகள் போன்றவற்றை எடுத்துரைக்க போவதாக ஜீவன் நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இவர் கன்பராவின் தமிழ் சமூகத்தின் முக்கிய நடவடிக்கையாளராக செயற்பட்டு வருகிறார்.

தம்மை பொறுத்த வரையில், அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments