உச்ச நீதிமன்றின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 132 சரத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு, செல்லுபடியாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
132ம் சரத்தின் இரண்டாம் பிரிவின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு பிப்பிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தீர்ப்பு வழங்க வேண்டுமாயின் குறைந்தபட்சம் மூன்று நீதியரசர்கள் மனுவை பரிசீலனை செய்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு நீதியரசர்கள் அவசர மேன்முறையீடு ஒன்று தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மட்டுமே உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கோதபாயவிடம் விசாரணை நடத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்படுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சட்ட மா அதிபரின் கருத்து கோரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment